தமிழ் சினிமா உலகில் ரசிகர்கள் மத்தியில் இரு தூண்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருமே வருடத்திற்கு ஒரு சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். இவர்கள் இருவரின் படங்கள் வெளிவருகிறது என்றாலே அந்த படத்தின் கதை எப்படி இருக்கிறது என்பது இரண்டாம் பட்சம்..
ஆனால் இவர்களது படத்தை திரையரங்கில் காண கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர் அவர்களின் மூலம் இந்த படங்கள் சிறப்பாக ஓடி நல்ல வசூலையும் அள்ளுகின்றன. இந்த நிலையில் தளபதி விஜய் தற்போது அவரது 66-வது திரைப்படம் ஆன வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க தில் ராஜு தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர் டைட்டில் மற்றும் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் போன்றவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகின இந்த படம் வருகின்ற பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது இதே போல் நடிகர் அஜித்தும் தற்போது தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திலிருந்து சில போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் செம டிரண்டாகின.
இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு அஜித் விஜய்யின் திரைப்படங்கள் ஒன்றாக மோத உள்ளன ஆம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரு படங்களும் வெளியாக இருக்கிறது இதனால் ரசிகர்கள் செம எதிர்பார்ப்பில் இருக்கின்றன. இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதால் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் எந்த படம் ஜெயிக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இப்படி இருக்க நடிகர் விஜய் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரது ரசிகர்களை பார்க்க பனையூருக்கு வந்திருந்தார். நீண்ட காலங்களுக்குப் பிறகு விஜய் அவர்களது ரசிகர்களை சந்தித்ததற்கு காரணம் அஜித்தின் துணிவு படம் ஜெயித்து விடுமோ என்ற எண்ணத்தில் தான் தனது ரசிகர்களை சந்தித்து வாரிசு படத்தை வெற்றி பெறச் செய்ய பல முடிவுகள் எடுத்ததாக கூறப்படுகிறது . பொறுத்திருந்து பார்ப்போம் பொங்களில் எந்த படம் ஜெயிக்கிறது என்பதை..