காமெடி நடிகர் சூரி ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். பின்பு வெண்ணிலா கபடி குழு படத்தில் அவர் இடம் பெற்றுள்ள பரோட்டா காமெடி மூலம் உலகமெங்கும் பரோட்டா சூரியாக பிரபலம் அடைந்தார்.
இந்த படத்திற்கு பின்பு அஜித்துடன் வேதாளம், விஜய் உடன் ஜில்லா, சூர்யாவுடன் அஞ்சான், ரஜினியுடன் அண்ணாத்த, சிவகார்த்திகேயனுடன் டான் போன்ற டாப் நடிகர்களின் படங்களில் நடித்து காமெடி நடிகராக பிரபலமடைந்துள்ளார். இவரது காமெடிக்கு என்றே பல ரசிகர்கள் உள்ளனர்.
தற்போதும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்ற சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை என்ற திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படத்திற்காக போலீஸ் கேட்டபில் நடித்து வருகின்ற சூரி சிக்ஸ் பேக் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகின்ற நிலையில் கூடிய விரைவில் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மூலம் சூரியை ஹீரோவாக பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்த வருகின்றனர்.
நடிகர் சூரி சினிமாவை தவிர நிஜ வாழ்க்கையிலும் உதவி என்று அவரை நாடிவரும் பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் அவரது சொந்த ஊரான மதுரையில் பல உணவகங்களை திறந்து குறைந்த விலையில் உணவு அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு சுமார் 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை ஆனால் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன.