தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடிக்க நடிகர்கள் பல வருடங்கள் எடுத்துக் கொள்கின்றனர். சிவகார்த்திகேயன் அதிலிருந்து மாறுபட்டவர். முதலில் சின்னத்திரை பின் வெள்ளித்திரைக்கு வந்து உடனே சினிமா எப்படி என்பதை தெரிந்து கொண்டு ஒவ்வொரு திரைப்படத்தியும் ஹிட் கொடுத்தார். அதனாலேயே சிவகர்த்திகேயன் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தையும் பெற்றார்.
இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை அபாரகரமாக இருந்தது. அஜித், விஜய் உடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வந்தது ஆனால் கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று மோசமான வசூலை அல்ல..
அவரது மார்க்கெட் கீழே இறங்கி இருக்கிறது இதிலிருந்து மீண்டு வர மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து ஓடுகிறார் அண்மையில் கூட பிரின்ஸ் படத்தில் இருந்து ஒரு சின்ன டான்ஸ் வீடியோ வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
ஒரு நடிகராக மட்டும் தன்னை வெளிக்காட்டி கொள்ளாமல் பாடகர் ஆகவும், தயாரிப்பாளராகவும், பாடல் எழுதுவது, விளம்பரங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு ஓடுகிறார் இப்பொழுது கூட ரஜினியின் “ஜெயிலர்” படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயன் திரை உலகிற்கு வந்து 11 வருடங்கள் ஆகிறது இதுவரை எவ்வளவு சொத்து சேர்த்து உள்ளார் என்பது குறித்து பார்க்க இருக்கிறோம்.
அதன்படி பார்க்கையில் நடிகர் சிவகார்த்திகேயனின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 110 கோடிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் கடந்த சில வருடங்களாக சிவகார்த்திகேயனுக்கு கடன் இருக்கு கடன் இருக்குனு சொல்றீங்க.. இந்த 110 கோடியை வைத்து கடனை அடைத்திருக்கக் கூடாதா என கூறிய கமெண்ட் அடித்தும் வருகின்றனர்.