80 காலகட்டங்களிலிருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணசத்திர கதாபாத்திரங்களிலும், காமெடியன்னாகவும் நடித்து வெற்றிகளை மட்டுமே சம்பாதித்து ஓடிக் கொண்டிருப்பவர் பிரகாஷ் ராஜ். அண்மையில் கூட தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் வில்லனாக நடித்து வெற்றி கண்டார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் குறிப்பாக வெற்றிமாறன் இயக்கி உள்ள விடுதலை, பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓடும் இவர் தமிழையும் தாண்டி பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வயசானாலும் இன்று வரை பிரகாஷ்ராஜின் மார்க்கெட் குறைந்த பாடு இல்லை.. இதுவரை பிரகாஷ்ராஜ் அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா என டாப் நடிகர்கள் தொடங்கி இளம் நடிகர்களின் படங்கள் வரை நடித்து வெற்றி கண்டு இருக்கிறார் இப்பொழுதும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார் திரை உலகில் இப்படி ஜொலிக்கும் பிரகாஷ்ராஜ் நிஜ வாழ்க்கையையும் அனுபவித்து வாழ்ந்து வருகிறார்.
இவர் 1994 ஆம் ஆண்டு பிரபல நடிகை பூஜா குமாரியை திருமணம் செய்து கொண்டார் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக 2009 ஆம் ஆண்டு டிவெர்ஸ் செய்துவிட்டு pony verma என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் தற்போது வாழ்க்கை, சினிமா இரண்டிலும் கொடிகட்டி பறக்கும் நடிகர் பிரகாஷ்ராஜின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி பார்க்கையில் பிரகாஷ்ராஜின் சொத்து மதிப்பு சுமார் 40 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது அவர் ஒரு படத்திற்கு 2.5 கோடியில் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிய அளவில் கிசுகிசுக்கப்படுகிறது.