இன்று பிறந்தநாள் காணும் நடிகர் தனுஷின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

dhanush
dhanush

நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின் இவர் தேர்ந்தெடுத்து நடித்த காதல் கொண்டேன், பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை என இவர் நடித்த  ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி படங்களாக மாறியதால் தமிழ் சினிமாவில் தற்பொழுது அசைக்க முடியாத ஒரு ஹீரோவாக இருக்கிறார்.

இருப்பின்னும் நடிகர் தனுஷ் கடைசியாக நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக மாறியதால் அதிலிருந்து மீண்டு எழ  அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்க சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடிக்க உள்ளார். அந்த வகையில் வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த ஒவ்வொரு திரைப்படமும் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளதால் தனுஷின் சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டும் என தெரிய வருகிறது. தமிழை தாண்டி நடிகர் தனுஷ் ஹாலிவுட் பாலிவுட் என தொடர்ந்து நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் தனுஷ் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் தனுஷ் 3.40 கோடி மதிப்பிலான பென்ட்லி, கான்டினென்டல் ஜிடி கார் மற்றும் ரோல்ஸ் ராய் பிரீமியம் பிளாக் கலர் என இரு சொகுசு கார்களை வைத்துள்ளார் தனுஷ்.  ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் விலை சுமார் 7 லிருந்து 8 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. நடிகர் தனுஷின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 160 கோடியில் இருந்து 180 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

படங்களில் நடிப்பதையும் தாண்டி பல வழிகளில் நடிகர் தனுசுக்கு காசு வந்து கொண்டிருக்கிறது குறிப்பாக ஒன்டர் பார் தயாரிப்பு நிறுவனம் பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு அவர் வாங்கும் சம்பளம் என பலகோடி சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தனுஷ் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு சுமார் 170 லிருந்து 180 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது ஆனால் இது அதிகாரபூர்வமான தகவல் இல்லை..