நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடியனாக பல டாப் நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவர் பேசிய காமெடி வசனங்கள் பலவும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் நிரந்தரமாக இருந்து வருகின்றன.
வடிவேலு காமெடி நடிகனாக மட்டும் சினிமாவில் தனது பயணத்தை நிறுத்திக் கொள்ளாமல் நடிகனாகவும் ஒரு சில படங்களில் நடித்து வெற்றி கண்டார். இப்படி தொடர்ந்து சிறப்பாக பயணித்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் சில காரணங்களால் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்தார்.
அண்மையில் தான் படங்களில் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக வடிவேலு நடித்து வருகிறார்.
இந்த படத்தை சுராஜ் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது மற்றும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த படம் அடுத்த மாதம் அக்டோபர் ஏழாம் தேதி வெளியிடப்பட குழு திட்டமிட்டுள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்றவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிய நிலையில் இன்று வைகைப்புயல் வடிவேலு அவரது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதற்காக நாய் சேகர் ரிட்டன்ஸ் பட குழு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த போஸ்டர் நீங்களே பாருங்கள்.