80 கோடி கொடுத்து தான் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு லாபி வாங்கி இருப்பாங்க.! விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த இசையமைப்பாளர்..

naattu-naattu-song
naattu-naattu-song

ஒவ்வொரு முறையும் தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த ஒரு சிலர் ஆஸ்கர் விருதினை பெற்று வரும் நிலைகயில் அவர்களை உலகமே பாராட்டி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி நாட்டு நாட்டு பாடல் தற்போது ஆஸ்கார் விருதை பெற்றிருக்கும் நிலையில் இந்தப் பாடல் குறித்த விமர்சனங்களுக்கு இசையமைப்பாளர் பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது ஆஸ்கர் விருது கிடைத்த நாட்டு நாட்டு பாடல் வெளியானதில் இருந்து தற்போது வரையிலும் பிரபலங்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி சோசியல் மீடியாவில் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கும் நிலையில் பலரும் 80 கோடிக்கு மேல் செலவு செய்துதான் இந்த விருதை வாங்கி இருக்க முடியும் என கூறி வருகின்றனர்.

மேலும் ஏராளமான தகவல்கள் வைரலாக இந்த பதிவுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நாட்டுநாட்ட பாடல் ஆஸ்கர் வென்றவுடன் பாராட்டுகள் ஒருபுறம் வந்து கொண்டிருந்தாலும் மறுபுறத்தில் ஆஸ்கர் விருது என்பதே பம்மாத்து, கோடிக்கணக்கில் லாபி செய்து தான் இதில் விருதுகளை பெற முடியும், இவர்களும் 80 கோடிக்கு மேல் செலவு செய்துதான் இதை வாங்கி இருக்கிறார்கள் என்ற விமர்சனங்களும் கூடவே வருவதையும் காண முடிகிறது.

jems-vasandh
jems-vasandh

ஆஸ்கர் விருதின் மீது வைக்கப்படுகிற இந்த குற்றச்சாட்டுகளில் ஓரளவுக்கு அடிப்படை உண்மைகள் இருந்தாலும் எல்லா சமயங்களிலும் எல்லா வெற்றிகளும் இப்படி பெறப்பட்டவை தான் தான் என்று சொல்ல முடியுமா.? அதற்கு சாத்தியம் உண்டா.? அப்படி பார்த்தால் எந்த விருதில், எந்த அங்கீகாரத்தில், அரசியல், லாபி, பண விளையாட்டு இல்லை.?

வேலைவாய்ப்பு, பதவி, பணிப் பேரம், நீதிமன்ற தீர்ப்புகள் என்ற எல்லாவற்றுக்கும் இன்று ஒரு விலை நியமிக்கப்பட்டு விட்டதே! எங்கோ ஒரு சிறு விஷயத்தில் நாம் பாரபட்சமாகவோ, சுயநலத்துடனும், வேண்டியவர் வேண்டாதவர், என் இனம், என் மக்கள் என்றோ பல்வேறு சூழல்களில் நாம் தவறியதே இல்லை? எல்லாமே அறம் பிறழ்வு தானே? ஆனால் இந்த வெட்டி வியாக்கானங்களை விட்டுவிட்டு உலகின் மிக‌ உயரிய விருதை நம் நாட்டுப்பாடல் பெற்றிருக்கிற தருணத்தில் அவர்களை வாழ்த்த மனம் இல்லாவிட்டாலும் பழி சொல்லாதிருப்பது பண்பாயிருக்கும் என கூறி உள்ளார்.