நடிகர் விஜயை பாடகராக அறிமுகபடுத்தி தொடர்ந்து 5 பாடல்களை பாடவைத்து அழகுபார்த்த இசையமைப்பாளர்.!

vijay
vijay

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் விஜய் இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார். மேலும் சினிமா என்றாலே அது விஜய்தான் என்கிற அளவிற்கு அவர் வளர்ந்து உள்ளார்.

இவர் ஆரம்ப காலத்தில் பத்திரிக்கையாளர்களால் கசக்கி பிழியப்பட்ட நடிகராக இருந்தாலும் தற்போது அனைவரும் தலையில் தூக்கி வைத்து ஆடும் அளவிற்கு உயர்ந்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தன்னுடைய திரைபடத்திர்க்காக நல்ல கதையம்சமான படத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மேலும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் இருந்து அவ்வபோது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்துள்ளது. இதனால் வாரிசு படத்தின் ஷூட்டிங்கை வேறொரு இடத்திற்கு மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்னதான் நடிகராக இவர் அறிமுகமாகி தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தாலும் இவர் பாடிய பாடலும் ஹிட்டாகி கொண்டு தான் வருகிறது. அந்த வகையில் இவர் பாடிய முதல் பாடல் தான் தென்னிசை தென்றல் தேவா இசையில் ரசிகன் படத்தில் இடம்பெற்றுள்ள பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி என்ற பாடலை முதன் முதலாக விஜய் அவர்கள் பாடியுள்ளார்.

dheva
dheva

ஆரம்பத்தில் இந்த பாட்டைப் பாட சற்று தயங்கிய விஜய் நீதான் இந்த பாடலை பாட வேண்டும் என்று தேவா அவர்கள் உறுதியோடு இருந்தார். இருந்தாலும் நான் பாடுகிறேன் ஆனால் வாய்ஸ்  சரியாக இல்லை என்றால் மாற்றிக் கொள்ளுங்கள் என்று பணிவோடு கேட்டு இருக்கிறார் நடிகர் விஜய். சரி நான் மாற்றி விடுகிறேன் என்று கூறியுள்ளார் தேவா. ஆனால் விஜய் பாடிய இந்த பாடல்  அன்றைய காலகட்டத்தில் சூப்பர் ஹிட் ஆனது. அது மட்டுமல்லாமல் தேவா தான் இவரை முதல் முதலாக பாடகராக அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் விஜய் அவர்கள் தற்போது பல பாடல்களை பாடி வந்தாலும் தேவா இல்லை என்றால் பாடகராக இருந்திருக்க முடியாது அந்த வகையில் தேவா அவர்கள் இசையில் தொடர்ச்சியாக 5 பாடல்களை பாடியுள்ளார் நடிகர் விஜய் அதில் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி எனும் பாடல், அதன் பிறகு தேவா இசையில் ஒரு கடிதம் எழுதினேன் என்ற பாடலையும் அதே படத்தில் இடம்பெற்ற அய்யய்யோ அலமேலு, என்ற பாடலையும் பாடியுள்ளார் மேலும்  கோத்தகிரி குப்பம்மா, தொட்டபெட்டா ரோட்டு மேல, போன்ற ஐந்து பாடல்களையும் தேவா இசையில் பாடியுள்ளார் நடிகர் விஜய்.