பல கோடி லாபம் பார்த்த “சார்பட்டா பரம்பரை” படம்.! சந்தோஷத்தில் மிதக்கும் இயக்குனர் பா ரஞ்சித்.! OTT தளத்தில் கூட இவ்வளவு லாபம் பார்க்க முடியுமா..

sarpatta
sarpatta

சிறந்த படைப்பாளி என்ற அந்தஸ்தை தன்வசப்படுத்திக் இருக்கும் இயக்குனர்  பா. ரஞ்சித் சமீபத்தில் நடிகர் ஆர்யாவை வைத்து குத்துச் சண்டையை மையமாக வைத்து “சார்பட்டா பரம்பரை” என்ற படத்தை எடுத்து இருந்தார்.

70 படங்களில் நடந்தால் குத்துச் சண்டையை தற்போது அந்த காலத்தில் நடந்ததை எடுத்துக்காட்டி விருந்து படைத்தது உள்ளார். படம் பார்ப்பதற்கு விறுவிறுப்பாகவும் அடுத்து என்ன நடக்கும் என்பது சர்ப்ரைசாக எடுத்துச் சென்றுள்ளதால் படம் சூப்பர் டூப்பர் இருக்கிறதோடு மட்டுமல்லாமல் நல்ல பெயரையும் பெற்றுள்ளது.

படத்தில் ஆர்யா, ஜான் கோக்கின், பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், ஜான் விஜய், ஷபீர் போன்றவர்களின் நடிப்பு மிரட்டும் வகையில் இருந்தது. பிரபலங்கள் சார்பட்டா பரம்பரை படத்தில் சந்திக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிக்கும்படி இருந்தன.

இப்படத்தின் மூலம் அவர்கள் தமிழ் சினிமாவில் மேலும் நல்ல படங்களை கைப்பற்றுவார்கள் என கூறப்படுகிறது. வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் தமிழை தாண்டி மற்ற மொழி பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து ரசிக்கின்றனர் அந்த அளவிற்கு படமும் பட்டைய கிளப்புகிறது.

இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை படம் OTT தளத்தில் வெளியாகி இருந்தாலும் தற்போது பல கோடி லாபத்தை சம்பாதித்து உள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளன. சார்பட்டா பரம்பரை படம் 24 கோடியில் உருவானது ஆனால் தற்போது 38 கோடி மொத்தமாக பிசினஸ் செய்து உள்ளது

அப்படி பார்கையில் இந்த திரைப்படம் இதுவரை 14 கோடி லாபம் கொடுத்துள்ளது என தெரியவருகிறது இதையே ஒரு பிரமாண்ட வெற்றியாக அந்த படம் பார்க்கிறது.