அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பாரதிகண்ணம்மா சீரியல் DNA ரிப்போர்ட் வந்துவிட்டது.! இதோ ப்ரோமோ வீடியோ..

barathi kannama
barathi kannama

தமிழ் தொலைக்காட்சிகளில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் ஒரு சில சீரியலுக்கு மட்டும் ரசிகர் பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்த நிலையில் நீண்ட காலமாக பாரதிகண்ணம்மா சீரியல் முடியப்போகிறது என தகவல் வெளியாகிக் கொண்டிருந்தது.

அதுமட்டுமில்லாமல்  பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து சில படப்பிடிப்பு வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டிஎன்ஏ பரிசோதனை ரிசல்ட் என்னவென்று தற்பொழுது ப்ரோமோ வீடியோவில் தெரியவந்துள்ளது.

பாரதி டாக்டரிடம் ரிப்போர்ட் என்ன என கேட்கிறார் அதற்க்கு உங்க DNA வும் இந்த DNA வும் மேச் ஆகுது என டாக்டர் கூறுகிறார் அதாவது டிஎன்ஏ பரிசோதனை செய்ததில் பாரதிக்கும் அவருடைய மகள்கள் ஹேமா லட்சுமி என மூவரும் டி என் ஏ பரிசோதனை செய்ததில் ஒன்றாக இருப்பது தற்பொழுது தெரியவந்துள்ளது இதனால் பாரதி இத்தனை நாள் கண்ணம்மாவை தவறாக புரிந்து கொண்டோமே தவறாக நினைத்து விட்டோமே என புலம்புகிறார். அது மட்டும் இல்லாமல் இவ்வளவு நாள் அவரைப் பிரிந்து விட்டோமே என்று கதறி அழுகிறார்.

நீண்ட காலமாக டிஎன்ஏ ரிப்போர்ட்டை வைத்து  கதையை நகர்த்தி வந்தார் இயக்குனர் மக்களும் பொறுக்காமல் இந்த சீரியலை நீங்கள் முடித்து விடுங்கள் இதற்கு மேல் எங்களால் பார்க்க முடியாது என பலரும் கோரிக்கை வைத்தார்கள் சமூக வலைதளத்தில் அதன் பிரதிபலனாக தான் டிஎன்ஏ ரிப்போர்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் விரைவில் முடிய இருப்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.