சின்னத்திரை தொலைக்காட்சிகளில் வாரத்தின் முதல் ஐந்து நாட்கள் காலை முதல் இரவு வரை தொடர்ந்து சீரியல்களை கொடுத்து வந்தாலும் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் விதவிதமாக நிகழ்ச்சிகளை மக்களை கவரும் வகையில் பல வித்தியாசமான முறையில் நடத்தி வருகின்றன.
அதில் மக்கள் பலருக்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் ஒரு புது முயற்சியாக சமையல் நிகழ்ச்சியில் விஜய் டிவி காமெடியாளர்களான பாலா, புகழ், தங்கதுரை, மணிமேகலை போன்றவர்களை இறக்கி நிகழ்ச்சியை ஒரு காமெடி கலாட்டாவாக மாற்றி மக்களை மகிழ்வித்து வந்தனர்கள்.
அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசன் வெற்றியடைந்ததை அடுத்து சீசன் சீசன் ஆக நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இதில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், அஸ்வின், பவித்ரா லக்ஷ்மி, தர்ஷா குப்தா போன்ற பல பிரபலங்களும் தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகை நடிகர்களாக திகழ்ந்த வருகின்றன.
மேலும் இதில் கோமாளியாக கலந்துகொண்ட போட்டியாளர்களான புகழ், சிவங்கி, பாலா போன்றவர்களும் வெள்ளித்திரையில் டாப் ஹீரோக்களின் படத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மக்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ள ப்ரோமோ ஒன்று வெளியாகி மக்களை குஷி படுத்தி உள்ளது.
ஆனால் அந்த ப்ரோமோவில் மக்கள் பலரின் ஃபேவரட் காமெடியனான புகழ் இடம்பெறாதது பலருக்கும் வருத்தத்தையும் கொடுத்துள்ளது.இதோ அந்த ப்ரோமோ வீடியோ.