அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம்.! தயாரிப்பாளர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்..

ajith
ajith

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமார் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் இவருடைய படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.

கடைசியாக அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை கண்டது இந்த படத்தினை அடுத்து இவர் ஏகே 62 திரைப்படத்தில் விரைவில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதாவது துணிவு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கும் படத்தில் இணைவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் அஜித்துக்காக கதையை எழுத பிறகு கதை சரியில்லாத காரணத்தினால் அஜித் மற்றும் லைக்கா நிறுவனம் ஏகே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவனை நீக்கினார்கள். இப்படிப்பட்ட நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது மேலும் அஜித்தும் சுற்றுலா மேற்கொண்டு வந்த நிலையில் பிறகு ஏகே 62 திரைப்படத்தினை மகிழ் திருமேனி தான் இயக்க இருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே விரைவில் இந்த படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் தந்தை தவறினார். அஜித்திற்கு இது பேரிழப்பாக இருந்து வரும் நிலையில் ஏராளமான திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அவருக்கு ஆறுதலை கூறி வருகின்றனர். எனவே இதனால் மேலும் ‘ஏகே 62’ திரைப்படத்தின் அப்டேட் தள்ளிப் போகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் கதாநாயகனாக அறிமுகமான அமராவதி படத்தை மே 1ஆம் தேதி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மறு வெளியீடு செய்ய உள்ளதாக தயாரிப்பாளர் பொன்னு ரங்கம் அறிவித்துள்ளார். அமராவதி படம் 1993ஆம் ஆண்டு வெளியாக இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை சங்கவி நடித்திருந்தார் மேலும் இந்த படத்தினை செல்வா இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.