Prabhu Deva: இந்திய சினிமாவில் ஒரு மொழியில் வெளியாகி அந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து ஹிட் அடித்து விட்டால் அதனை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி பிரபுதேவா இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் அதிக மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டான்ஸ் மாஸ்டராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் பன்முக திறமைகளை கொண்டு விளங்கும் பிரபுதேவா தற்போது வரையிலும் சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார். இவருடைய இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
கோமதி செய்த தவறால் அசிங்கப்பட்டு நிற்கும் பாண்டியன்.! கதிரை கொள்ள வரும் ராஜியின் சித்தப்பா…
அதாவது தெலுங்கில் 2005ஆம் ஆண்டு வெளியான நுவ்வோஸ்தானந்தே நேனோடண்டனா என்ற திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தின் மூலம் தான் பிரபுதேவா தெலுங்கு திரைவுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தில் சுமந்த் ஆர்ட் புரொடக்ஷன் தயாரிக்க சித்தார்த், த்ரிஷா, ஸ்ரீ ஹரி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
வித்தியாசமான கதை களத்துடன் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் காரணத்தினால் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு இந்திய சினிமாவில் சாதனை படைத்தது.
விவாகரத்து செய்தாலும் இனி இரண்டாவது திருமணம் வேண்டாம் என முரட்டு சிங்கிளாக வாழும் 4 நடிகர்கள்.!
இவ்வாறு தமிழில் உனக்கும் எனக்கும் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஜெயம் ரவி, திரிஷா நடிக்க மோகன் ராஜா இப்படத்தை இயக்க தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து கன்னடம், பெங்காலி, பஞ்சாபி, நேபாளி உள்ளிட்ட மொத்தம் 9 மொழிகளில் வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலும் பிளாக்பஸ்டர் ஹெட் அடித்தது.