தற்போது சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் கௌதம் கார்த்திக். இவர் 80-90 காலகட்டத்தில் பல ஹிட் படங்களை கொடுத்த நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் ஆவார்.
கௌதம் கார்த்திக்கும் தனது அப்பா போலவே சிறந்த நடிப்பு திறமை உடையவர். அதோட கௌதம் கார்த்திக் தனது அனைத்து திரைப்படங்களின் கதையையும் மிகவும் உன்னிப்பாக பார்த்து வருகிறார்.
இந்த வகையில் தேவராட்டம்,இருட்டு அறையில் முரட்டு திருடன், சிப்பாய், ரங்கோன், என்னமோ ஏதோ, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், வை ராஜா வை, கடல் உள்ளிட்ட இன்னும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் இவருக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை.அதோடு சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம் அடையவில்லை.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அத்தோடு முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் நடித்து வருகிறா.ர் அந்த வகையில் சிம்புடன் இணைந்து சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இவர் செல்லப் பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொரோனா காலத்திலும் கூட கடுமையான கட்டுப்பாட்டுடகளுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காலை 11:05 மணி அளவில் நாளை வெளியாகும் என்று படக்குழுவினர்கள் நேற்று கூறியிருந்தார்கள். அந்தவகையில் இந்த போஸ்டரை விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி ஆகியோர் வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் தற்பொழுது கௌதம் கார்த்திக் செல்லப்பிள்ளை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை அருண் சந்திரன் இயக்கியுள்ளார்.