ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட விஜய் படம்.? இப்ப கூட மீம்ஸ் போட்டு கிழிக்கிறாங்க..

vijay

தளபதி விஜய் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருவதால் அவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைசியாக இவர் நடித்த வாரிசு படம் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் 60  நாள் ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மீதி 60 நாள் ஷூட்டிங் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த படமும் விஜய்க்கு ஒரு நல்ல படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வந்தாலும் விஜயின் ஒரு சில படங்கள் கேலிகளுக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறது.

அப்படி விஜய் கேரியரில் பெரிய அளவில் கழுவி உத்தப்பட்ட படம் குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. 2022 ஏப்ரல் 13ஆம் தேதி நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் பீஸ்ட்.. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு மாலில் இருக்கும் மக்கள்களை அடைத்து வைத்து  வில்லன்கள் அரசுக்கு சில நிபந்தனைகள் வைக்கின்றனர் இதிலிருந்து விஜய் எப்படி மக்களை காப்பாற்றுகிறார்.

வில்லன்களை எப்படி கொல்லுகிறார் என்பது தான் படத்தின் கதை.. படம் விறுவிறுப்பு, காமெடி,  விஜய்யின் ஓப்பனிங் கூட செம மாஸாக இருந்தது  அனைத்தும் இதில் இருந்தாலும் லாஜிக் மிஸ் டேக் அதிகமாக இருந்தது. மேலும் படம் போக போக எதிர்பார்த்த பரபரப்பு குறைய தொடங்கியது இதனால் படம் மோசமான விமர்சனத்தை பெற்றது.

vijay -
vijay –

ரசிகர்கள் பலரும் பீஸ்ட் படத்தின் சீன்களை வைத்து தான் பல மீம்ஸிகளை போட ஆரம்பித்தனர் விஜய் கேரியரில் ரசிகர்கள் அதிகம் கழுவி ஊத்திய படம் இந்த படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது படம் வெளிவந்து ஒரு வருடமாகிய நிலையில் இப்பொழுதும் பீஸ்ட் படத்தை பலரும் கிழித்து தொங்க விடுகின்றனர். இதோ பீஸ்ட் படத்தை கலாய்க்கும் அந்த  மீம்ஸ்களை நீங்களே பாருங்கள்..