விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் தல அஜித் நடித்து இருந்த காதல் கோட்டை திரைப்படத்தை வைத்து கிண்டலடிக்க பட்டுள்ளது என்று இப்படத்தின் இயக்குனரான அகத்தியன் கூறி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
அஜித் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியையும், திரை உலகில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்த திரைப்படம் தான் காதல் கோட்டை. இந்த திரைப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக தேவயானி நடித்திருப்பார். இப்படத்தை இயக்குனர் அகத்தியன் இயக்கியிருந்தார்.
அது மட்டுமல்லாமல் இப்படம் தேசிய விருது வாங்கியது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் தளபதி விஜய் எப்போதும் ஒரு குட்டி கதை சொல்லும் பழக்கத்தை வழக்கமாக கொண்டிருப்பார். அந்த வகையில் விஜய் தனது காதல் தோல்வியின் போது ஒரு குட்டி கதை சொல்வார். அது காதல் கோட்டை திரைப்படத்தின் காட்சியை மையமாக வைத்து கிண்டல் அடிக்கப்பட்டது.
காதல் கோட்டை திரைப்படத்தில் தல அஜித் மற்றும் தேவயானி இருவரும் லட்டர் மூலமாக வெகு நாட்கள் வரை காதலித்து வருவார்கள். அந்த வகையில் தல அஜித் தேவயானிக்கு பரிசாக சொட்டர் ஒன்றை அனுப்பி வைப்பார். இதே காட்சி மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் ஜோடியாக நடித்திருந்த மாளவிகா மோகனனிடம் விஜய் கேட்கும்பொழுது அதற்கு மாளவிகா மோகனன் அடிக்கிற வெயிலுக்கு எதுக்கு ஸ்வெட்டர் என்று காதல் கோட்டை கட்சியை கிண்டல் செய்வதாக அமைந்தது.
இவ்வாறு இந்த காட்சி இணையதளத்தில் வைரலாகி வந்தது. இதனை பார்த்த பலர் தங்களது கருத்துக்களை கூறி வந்தார்கள். அதேபோல் காதல் கோட்டை படத்தின் இயக்குனரான அகத்தியன் ராஜஸ்தானில் பகலில் எவ்வளவு வெயில் இருக்கிறதோ அதே அளவிற்கு இரவிலும் கடுமையான பணியாக இருக்கும் இது அங்கு இருப்பவர்களுக்கு தான் தெரியும். இது கூட தெரியாமல் அரைகுறையாக தெரிந்து கொண்டு எதையும் கூறாக் கூடாது என்று அந்த காட்சியை கிண்டல் செய்து பதிலடி கொடுத்துள்ளார்.