திறமை உள்ள ஒரு சில நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அவரை தூக்கி எறிவதும் சினிமா உலகில் காலம் காலமாக நடந்து வருகிறது அந்த வகையில் தமிழ் சினிமாவில் காதல் படத்தின் மூலம் சினிமா உலகில் என்ட்ரியான அருண்குமார் இந்த திரைப்படத்தில் இவர் காமெடியனாக நடித்து அசத்தியிருப்பார்.
காதல் படத்தில் பரத் சந்தியா ஆகியோரின் நடிப்பு அசாதாரணமாக இருந்தது என்பது நாம் அனைவரும் மறுக்க முடியாது அந்தளவிற்கு காதல் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்து இருப்பார்கள்.
அதே படத்தில் காமெடி காட்சிகளில் அருண்குமார் பின்னி பெடல் எடுத்து இருப்பார். அதன் காரணமாக இவருக்கு தளபதி விஜயின் “சிவகாசி” திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த அருண் குமாருக்கு திடீரென வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் மனம் நொந்து போனார்.
சினிமாவில்தான் தோற்றுப்போனார் ஆனால் அவரது நிஜ வாழ்க்கையில் வெற்றி பெற்றார் என்று கூற வேண்டும் ஏனென்றால் பல வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்த அருண்குமார் தற்பொழுது இருவீட்டார் சம்மதத்துடன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இதோ அருண்குமார் காதலித்த பெண்ணுடன் இருக்கும் புகைப்படம்.
புகைப்படத்தை பார்த்து வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்.