காமெடி நடிகர் புகழுக்கு எப்ப கல்யாணம் தெரியுமா.? அவரே சொன்ன சுவாரசிய தகவல்.!

pukazh
pukazh

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்பு படிப்படியாக தனது காமெடி திறமையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ் இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலமே தமிழ் மக்களிடையே பெரிதும் பிரபலமடைந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு புகழுக்கு வெள்ளித்திரை படவாய்ப்புகளும் சில வந்தன அந்தவகையில் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், அஜித்தின் வலிமை போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியவர். மேலும் பல படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட புகழை மடக்கி.

சில யூடியூப் நிபுணர்கள் புகழிடம் கேள்விகளை கேட்டனர் அதற்கு ஜாலியாக பதிலளித்த புகழிடம் டான் படத்தில் உங்களது தங்கச்சி சிவாங்கி நடித்திருந்தார்களே அதை நீங்கள் பார்க்கும் போது எப்படி இருந்தது என கேட்டனர் அதற்கு எனது தங்கச்சி சிறப்பாக நடித்து கலக்கி விட்டாங்க, ரொம்ப பெருமையா இருக்கு எனவும் கூறினார் மேலும் ஒருவர் நீங்களும் சிவாங்கியும் சேர்ந்து எப்போது படம் பண்ண போகிறீர்கள்.

எனக் கேட்டதற்கு எனக்கும் ஆசை தான் அப்படிப்பட்ட கதை அமைந்து யாராவது எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக நடிப்போம் என ஜாலியாக கூறினார். எப்போது உங்களுக்கு திருமணம் என கேட்டதற்கும் அதற்கான வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது இந்த ஆண்டு கண்டிப்பாக திருமணம் செய்து விடுவேன் என உறுதியாக கூறியுள்ளார் புகழ்.

இப்படி அவர் கூறியதையடுத்து புகழ் ரசிகர்கள் மற்றும் குக் வித் கோமாளி ரசிகர்கள் என பலரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் அதனால் சமூக வலைதள பக்கங்களில் புகழுக்கு இப்போதே திருமண வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.