டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து தனது விமர்சகர்களை திட்டியே முன்னுக்கு வந்தவர். டிக் டாக் செயலி மூடிய பிறகு youtube சேனல் ஓப்பன் செய்து அதில் தோன்றிய ஜிபி முத்து அனைவராலும் அறியப்பட்டார். இப்படி டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்துவுக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து உள்ளது அதாவது நடிகை சன்னி லியோன் நடிப்பில் உருவாக்கி உள்ள ஒரு திரைப்படத்தில் ஜிபி முத்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஜி பி முத்து தனது காமெடியாள் அனைத்து ரசிகளையும் கவர்ந்தார். இந்த நிலையில் ஜிபி முத்து பிக் பாஸில் இருந்து ஒரு சில நாட்களிலேயே வெளியேறினார். கமல்ஹாசனுக்கே தக்லைப் கொடுத்த ஜி பி முத்து வெளியேறியது ரசிகர்களுக்கு சோகம் அளித்திருந்தது.
இந்த சீசன் பிக் பாஸ்சை தூக்கி நிறுத்த ஜி பி முத்து தான் முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர்தான் பைனல் கார்டு வெல்லுவார் என்று எதிர்பார்த்து இருந்தனர் ஆனால் தன்னுடைய மகனை பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து பிக் பாஸை விட்டு வெளியேறினார் ஜி பி முத்து.
பிக் பாஸ் விட்டு வெளியேறிய ஜிபி முத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜிபி முத்து அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறிய தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது. தானும் தனது சகோதரரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த இடத்தில் எனக்கும் என் சகோதரருக்கும் சண்டை வந்ததாகவும் அப்போது அந்த சண்டையில் தன்னுடைய சகோதரர் பிளேடால் தன்னுடைய உடலில் பல இடங்களில் வெட்டியதாகவும் கூறியுள்ளார்.
அதன் பிறகு தனது நண்பர்தான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் என்றும் கூறியுள்ளார். மேலும் மருத்துவமனையில் இருக்கும் போது தனது சகோதரர் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார். அவர் தன்னை வெட்டியது கூட எனக்கு கஷ்டமாக இல்லை அவர் இறந்தது தான் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ஜி பி முத்து. அது மட்டுமல்லாமல் தன்னுடைய சகோதரர் பிள்ளைகளையும் தான் பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார்.