காலத்திற்கு ஏற்றவாறு சினிமா படங்களை கொடுத்து அசத்தி வருபவர் இயக்குனர் மணிரத்தினம் இவர் கடைசியாக எடுத்த பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியாக திட்டமிட்டு இருந்தார் அதன்படி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல் அள்ளி சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் வெளியாகும் என படக்குழு சொன்னது.. அதுபோலவே படப்பிடிப்பை அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது அண்மையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரைலர் போன்றவற்றை வெளியிட்டு அசத்தியது.
அதனை தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவையும் மிக கோலாகலமாக நடத்தியது இதில் சிறப்பு விருந்தினராக கமலஹாசன், சிம்பு போன்றவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவின் மூலம் பொன்னியின் செல்வன் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது அதை குறைய விடாமல் பார்த்துக் கொள்ள பொன்னியின் செல்வன் படக்குழுவும் முக்கிய கதாபாத்திரங்களின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு அசத்தி வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், நந்தினி, குந்தவை போன்ற ஒவ்வொருவரின் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டு வருகிறது அதுபோல தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான பூங்குழலி கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது..
பொன்னியின் செல்வன் படத்தில் இவரது கதாபாத்திரத்தை பார்க்க பல ரசிகர்கள் இருக்கின்றனர் இந்த நிலையில் பூங்குழலின் மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வைரலாகி வருகிறது. படத்தின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டு உள்ளது. இதோ அந்த மேக்கிங் வீடியோவை நீங்களே பாருங்கள்..
A ray of sunshine in a sea of darkness!
Here is the most-awaited BTS of #Poonguzhali #AishwaryaLekshmiIn theatres from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!
ICYMI, watch #PS2Trailer
▶️ https://t.co/PvNu4lqt61 #CholasAreBack #PS2 #PonniyinSelvan2 pic.twitter.com/oLjHYVOBg7— Lyca Productions (@LycaProductions) April 5, 2023