நடிகர் அஜித்குமார் சினிமாவில் எப்படியோ அதே போலவே தான் நிஜத்திலும் இருப்பார் என பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த நிலையில் பிரபல மேக்கப் மேன் ஒருவர் அஜித் பற்றி வெளிப்படையாக பேசியது இணையதள பக்கத்தில் தற்பொழுது பேசும் பொருளாக மாறி உள்ளது அவர் சொன்னது..
அஜித் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தார். ஒரு நாள் காலையிலேயே அனைத்து நடிகர் நடிகைகளும் வந்துவிட்டனர் அவருக்கு மேக்கப் போடும் உதவியாளர்களும் வந்து விட்டனர் ஆனால் அஜித்திற்கு மேக்கப் போடும் அந்த மேக்கப் மேன் மட்டும் வரவே இல்லை இதனால் சூட்டிங் ஸ்பாட் ரொம்ப தாமதமானது.
சிறிது நேரம் கழித்து அந்த மேக்கப் மேன் ஓடி வந்தாராம். அஜித் ஏன் லேட் என கேட்க இரண்டு பஸ் பிடித்து வந்திருக்கிறேன் என கூறியுள்ளார். உன்கிட்ட வண்டி இல்லையா என கேட்டதற்கு இல்லை என சொன்னாராம். சிறிது நேரம் கழித்து அஜித்..
ஒரு புதிய ஹீரோ ஹோண்டா பைக்கை வாங்கி கொடுத்து இனி நீ வண்டியில் தான் வர வேண்டும் என கூறினாராம் உடனே அந்த மேக்கப் மேன்னுக்கு ஒண்ணுமே சொல்ல முடியவில்லை, உடனே அஜித்திடம் சாவியை கொடுத்து விட்டாராம் அஜித் உனக்கு வண்டி வேணாமா என கேட்க..
இல்லை இல்லை சார் என கூறிவிட்டு காலில் விழுந்து வணங்கி வண்டி சாவியை வாங்கிக் கொண்டாராம். உடனே அஜித் முதுகில் தட்டி இப்படி எல்லாம் பண்ண கூடாது என கூறினாராம் இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த மேக்கப் மேன் வெளிப்படையாக கூறியுள்ளார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.