புஷ்பா 2 ரிலீஸ் எப்பொழுது தெரியுமா? அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட ரெட் சில்லீஸ்..

PUSHPA 2
PUSHPA 2

Pushpa 2: அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தினை சுகுமார் இயக்கியிருந்த நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் லாரி டிரைவர் ஆகவும், சந்தனம் கடத்துவராகவும் நடித்திருந்தார். இதில் அல்லு அர்ஜுனின் பாடி லாங்குவேஜ், பேச்சு போன்றவை தரமாக அமைந்ததால் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது அப்படி உலகம் முழுவதும் புஷ்பா படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் டப் செய்யப்பட்டு வெளியான இந்த படம் பாலிவுட்டில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இவ்வாறு இந்த வெற்றினை தொடர்ந்து புஷ்பா 3 படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் புஷ்பா படத்தின் டிரைலர் வெளியானது.

அதில் சிறையிலிருந்து தப்பிச் சென்ற புஷ்பாவை காவல்துறையினர் சுட்டுக்கொன்ற விட்டனர் என்றும் புஷ்பா வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்றும் செய்தி பரவி வர இதனால் புஷ்பாவின் ஆதரவாளர்கள் கடைகளை அடித்து நொறுக்குகின்றனர். ஆனால் புலிக்காக வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் புஷ்பா இருப்பதை பார்த்த பொதுமக்கள்  புஷ்பா உயிருடன் தான் இருக்கிறார் என்று ஆனந்தம் கொள்கின்றனர். இது போன்ற காட்சிகள் ட்ரைலரில இடம் பெற ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் புஷ்பா படத்தின் ரிலீஸ் ஆக காத்து வருகின்றனர்.

அப்படி தற்பொழுது புஷ்பா படத்தின் ரிலீஸ் தேதியை பட குழு அறிவித்துள்ளது. புஷ்பா 2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினம் அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். புஷ்பா முதல் பக்கத்தை விட இரண்டாவது பாகம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.