பிரம்மாண்டமான தொகையை கொடுத்து “பொன்னியின் செல்வன்” படத்தை கைப்பற்றிய முக்கிய OTT நிறுவனம்.?

ponniyin selvan
ponniyin selvan

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் இவர் இதுவரை ரஜினி கமல் போன்ற டாப் ஜாம்பவான்களை வைத்து படங்களை எடுத்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சினிமா உலகில் ஓடிக் கொண்டிருக்கும் இவருக்கு பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை எடுப்பதே கனவாக வைத்திருந்தார். ஆனால் இரண்டு மூன்று தடவை அதை எடுக்க நினைத்தார் தோல்வியில் முடிந்தது கடைசியாக லைக்கா நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் போன்ற பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன்..

கைகோர்த்து ஒரு வழியாக பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், பாடல்கள் போன்றவை வெளிவந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச்சை வெளியிட இருப்பதாக படக்குழு திட்டமிட்டு இருக்கிறது இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார். பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களையும் மக்களையும் கவர்ந்திருக்கும் என தெரிய வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை மிகப் பிரம்மாண்ட தொகை கொடுத்து பிரபல OTT நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக ஒரு தகவல் கசிந்து உள்ளது. அந்த நிறுவனம் வேறு எதுவும் அல்ல அமேசான் நிறுவனம் தான் எதிர்பார்க்காத ஒரு தொகையை கொடுத்து பொன்னியின் செல்வன் படத்தை கைப்பற்றி உள்ளதாம்.