“ஜெய்பீம்” படத்தை பார்த்துவிட்டு தனது கருத்துகளை சொன்ன நட்சத்திரங்கள் – தீயாய் பரவும் பதிவு.?

surya
surya

சூர்யா நடிப்பில் சமீபகாலமாக சிறந்த திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன அந்த வகையில் சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜெய்பீம் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இத்திரைப்படம் இதுவரை இல்லாத கெட்டப்பில் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக வக்கீல்லாக சூர்யா பின்னிப் பெடல் எடுத்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி நேரடியாக அமேசான் OTT  தளத்தில் வெளியாக இருக்கிறது.

அதற்கு முன்பாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சூரிய கலந்துகொண்டு ஜெய்பீம் படத்தை பற்றி பெரிதாக பேசி இருந்தார். அதில் அவர் கூறியது : என்னுடைய படங்களில் இது மிகப்பெரிய ஒரு படம். மேலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கிறேன் இந்த படத்தை ரசிகர்களும் மக்களும் பார்த்துவிட்டு அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது மிகப்பெரிய ஒரு தாக்கத்தை கொடுக்கக்கூடிய படம் ஜெய் பீம் என கூறினார்.

ஜெய்பீம் என்ற பெயர் முதலில் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் ஒரு படத்திற்க்காக வைத்திருந்தார் ஆனால் நானும் மற்றும் படக்குழுவினர் உடனடியாக அந்த பெயரை கேட்ட உடனே கொடுத்து விட்டார். இந்த படத்தின் கதைக்கு கச்சிதமாக ஜெய்பீம் என்ற பெயர் செட் ஆகி உள்ளது நிச்சயம் ஹிட்டடிக்கும் என கூறினார்.

இந்த நிலையில் இந்த படம் வெளிவருவதற்கு முன்பாக பிரேவியூ ஷோ சினிமா நட்சத்திரங்களுக்காக திரையிடப்பட்டது. அதைப் பார்த்துவிட்டு வெளியே வந்த முக்கிய நட்சத்திரங்கள் பலரும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தைப் பற்றிய கருத்துக்களைக் கூறிவருகின்றனர் அதன்படி இந்த திரைப்படம் சூர்யா கேரியரில் ஒரு மிகப்பெரிய படம் எனவும் ஜெய்பீம் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம் எனவும் கூறி வருகின்றனர்.