விரைவில் முடிய போகும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்.! வருத்தத்தில் ரசிகர்கள்..

vijay-tv-2

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவி தொடர்ந்து ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது மேலும் முக்கியமாக பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, தமிழும் சரஸ்வதியும், செல்லம்மா உளிட்ட ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள நிலையில் தற்போது பிரபல சீரியல் ஒன்று இன்னும் சில வாரங்களில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி டிஆர்பியில் முன்னணி வகிப்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி சமீபத்தில் மிகவும் வித்தியாசமாக சிப்பிக்குள் முத்து என்ற புதிய சீரியலை அறிமுகம் செய்தியது. கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களின் பிரபல நடிகர் நடிகைகளை வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பி வந்த நிலையில் ஜெய் டிசோசா என்ற நடிகர் தமிழ் சினிமாவிற்கு சிற்பிக்குள் முத்து சீரியலின் மூலம் அறிமுகமானார்.

இவர் இந்த சீரியலில் ஆகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜெய் டிசோசா ராக மற்றும் ஹாப்பி நியூ இயர் போன்ற கன்னட மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஜோடியாக வாணி ரோலில் லாவண்யா நடித்து வருகிறார் இந்த சீரியலின் கதைப்படி சித்தி பரமேஸ்வரியும் அவரின் மகள் நிலாவும் பிளான் போட்டு வாணிக்கும் ஆகாஷ் இருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

மூன்று அக்கா தங்கைகளும் ஒரே வீட்டில் மருமகள்களாக வாழ்கின்றன ஆகாஷ் பழைய விஷயங்கள் மறந்து குழந்தை போல் இருந்து வரும் நிலையில் அவரை எப்படியாவது மாற்ற வேண்டும் என்பதற்காக வாணி தாய்போல் பார்த்து அனைத்து விஷயங்களையும் ஞாபகத்திற்கு வர வைக்கிறார்.

sipikul muthu
sipikul muthu

ஆனால் கடைசியில் ஆகாஷ் வானியை மறந்து விடுகிறார் மேலும் அவருக்கு பிறந்த குழந்தையும் அவருக்கு நினைவில் இல்லை இவ்வாறு இந்த சீரியலில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்து வரும் நிலையில் இந்த சீரியல் டிஆர்பியில் பெரிதும் அடி வாங்கி வருவதால் விரைவில் முடிப்பதற்காக விஜய் டிவி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.