தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வசூலை வாரிக் குவிக்கின்றன. சமிப காலமாக இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு பல்வேறு பட வாய்ப்புகளைக் கொடுத்து வரும் விஜய் ஆரம்பத்தில் பல முன்னணி இயக்குனர்கள் உடன் பணிபுரிந்து உள்ளார்.
ஆனால் அப்பொழுதும் கூட ஒரு சில இயக்குனர்களுடன் விஜய் கை கோர்த்தே கிடையாது. காரணம் விஜய் சிறந்த இயக்குனர் அந்தஸ்தை வைத்திருப்பவர்களுடன் இணைந்து பணியாற்ற நினைத்தாலும் அதற்கு முன்பாக படத்தின் கதையை முழுவதுமாக கேட்டு அறிந்த பிறகுதான் நடிக்கலாமா வேண்டாமா என்பதை பற்றியே முடிவு எடுப்பார்.
அந்த வகையில் நடிகர் விஜய் இதுவரை பல்வேறு டாப் இயக்குனர்கள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்துள்ளார் அவர்களில் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து திரைப்படத்தை எடுத்த சுந்தர் சியுடன் இதுவரை விஜய் பயணித்ததே கிடையாதாம்.
தமிழ் சினிமாவில் ஹீரோவாகம் இயக்குனராகவும் வெற்றி கண்டு வரும் சுந்தர் சி ஒரு சில ஹீரோக்களுடன் என்னால் கைகோர்க்க முடியாது காரணம் என்னுடைய கதையே என அவரை வெளிப்படையாக கூறியுள்ளார். எப்போதுமே படத்தின் கதையை தெளிவாக கூற மாட்டார் மேலும் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது காட்சிகளை திடீரென உள் நுழைத்து எடுப்பார்.
அந்த காரணத்தினால் விஜய் இவரது படத்தில் நடிக்க முடியாமல் போனது. கதையை முழுமையாக விஜயுடன் சொன்ன பிறகுதான் விஜய் அந்த படத்தில் நடிப்பார் அதனால் சுந்தர் சியும், விஜய்யும் எந்தவொரு படத்திலும் நிலையாக பணியாற்ற முடியவில்லை.