சினிமா உலகில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார் ராகுல் தாத்தா இவர் எம்ஜிஆர், சிவாஜி போன்ற மூத்த கலைஞர்களுடன் படங்களில் நடித்துள்ளார் மேலும் எம்ஜிஆரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அயராது பாடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் தொடர்ந்து படங்களில் நடித்தாலும் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்துள்ளார்.
இனி வாய்ப்புகள் தனக்கு கிடைக்காது என தெரிந்து மூட்டை முடிச்சு கட்டும் பொழுது தான் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. முதலாவதாக தனுஷ் நடிப்பில் உருவான மாரி 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதன் பிறகு பட வாய்ப்புகள் ஏராளமாக கிடைத்தன. அதில் ஒன்றாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான நானும் ரவுடி தான்.
திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தினார். இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு அடுத்த அடுத்த வாய்ப்புகள் சினிமா உலகில் கிடைத்தது மேலும் சின்னத்திரை பக்கமும் தொடர்ந்து தலை காட்டி வருகிறார்.
குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டு தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி அதிக ரசிகர்களை அந்த ஷோ பக்கம் கவர்ந்து இழுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விக்கி நயன்தாரா திருமணம் குறித்தும் வெளிப்படையாக பேசி உள்ளார்.
நானும் ரவுடிதான் படத்தில் விக்கி நயன்தாரா இருவரையும் நான் செம்மையாக கலாய்ப்பேன் என கூறினார் மேலும் பேசிய அவர் நயன்தாராவிடம் என்ன சொல்வார் என்றால் விக்னேஷ் சிவன் பார்ப்பதற்கு அப்படியே பிரபுதேவா போல் இருப்பதாகவும் நயன்தாராவுடன் சொல்லி உள்ளார் அதனாலையே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.