ரஜினியும், கமலும் வெற்றியை அள்ள முக்கிய காரணம் – இந்த வித்தியாசம் தான்.! கே எஸ் ரவிகுமார் பேட்டி.

k.s.-ravikumar
k.s.-ravikumar

தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி பின் தனது படங்களிலேயே நடித்து ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்து பன்முகத் தன்மை கொண்டவராக ஓடிக்கொண்டிருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.முதலில் இவர் புரியாத புதிர் என்னும் படத்தை இயக்கி அறிமுகமானார்.

அதன்பின் சேரன் பாண்டியன், பொண்டாட்டி ராஜ்ஜியம், சக்திவேல் போன்ற படங்களை இயக்கி நாட்கள் போகப் போக டாப் நடிகர்களை வைத்து அசத்தலான படங்களை கொடுத்தார்.  ரஜினி, கமலை வைத்து அதிக ஹிட் படங்களை கொடுத்து அசத்தி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் கே. எஸ். ரவிக்குமார்.

குறிப்பாக ரஜினியை வைத்து கேஎஸ் ரவிக்குமார் முத்து, படையப்பா, லிங்கா போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல நடிகர் கமலை வைத்து கேஎஸ் ரவிக்குமார் அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், தெனாலி, தசாவதாரம் போன்ற படங்களை இயக்கினார்.

இரண்டு சூப்பர் ஸ்டார்களை வைத்து அசத்தலான படங்கள் கொடுத்துக்கொண்டிருந்த இவர் அண்மை காலமாக படங்களை இயக்குவதையும் தாண்டி படங்களைத் தயாரிப்பதும் நடிப்பதுமாக இருந்து வருகிறார் இவர் கடைசியாக தர்ஷன் மற்றும் லாஸ்லியா உடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினிக்கும் கமலுக்கும் என்ன வித்தியாசம் என்பதை கூறி உள்ளார் ரஜினி என்றால் மாஸ், கமல் என்றால் கிளாஸ்.. இரண்டு பேரும் இரண்டு விதமான மைண்ட் செட் உள்ளவர்கள். இருவரும் கரெக்டான ரூட்டில்  பயணிக்கிறார்கள் அதனால் தான்  தற்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பதாக கூறினார்.