டைட்டில் வின்னர் பட்டம் வேண்டாம்.. பணப்பெட்டி போதும்.! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற துடிக்கும் முக்கிய போட்டியாளர்.

bigboss-
bigboss-

வெள்ளித்திரையில் எப்படி ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் ஆக்சன், எமோஷன், காமெடி போன்ற படங்களை வெளியிட்டு வருகிறதோ அதேபோல சின்னத்திரையும் வெள்ளி திரைக்கு நிகராக தொடர்ந்து ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களை கொடுத்து மக்களை கவர்ந்திழுத்து வருகிறது.

குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சி சொல்லவே வேண்டாம் புதுப்புது ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களை கொடுக்கிறது. அதில் ஒன்று பிக்பாஸ் இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் 6 வது சீசனும் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

வார வாரம் நடக்கும் எலிமினேஷன் ரவுண்டில் ஒவ்வொருவராக வெளியேறினார் ஆனால் ஜி பி முத்து மட்டும் தனது சொந்த காரணங்களால் கமலிடம் சொல்லி வீட்டை விட்டு வெளியேறினார். இப்படி இருக்கின்ற நிலையில் கடைசியாக நடந்த எலிமினேஷன் ரவுண்டில் குறைந்த வாக்குகளை பெற்று ஏ டி கே வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து மற்றொரு போட்டியாளரை வெளியேற்ற பிக்பாஸ் வீட்டுக்குள் பணப்பெட்டியை வர வைத்துள்ளது நாளுக்கு நாள் அந்த பணப்பெட்டியின் மதிப்பு அதிகரித்து கொண்டுமே இருக்கிறது. இதனால் அந்த பண பெட்டியை எடுக்க பலரும் காத்துகொண்டு இருக்கின்றனர். எப்படியும் அசீம், விக்ரம் ஆகியவர்கள் எடுக்க மாட்டார்கள்..

மற்றவர்கள் எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது அதன்படி பார்க்கையில் மைனா நந்தினி அல்லது கதிரவன் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கதிரவனுக்கு மக்கள் சப்போர்ட் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருப்பதால்.. அவர் பணப்பெட்டியை எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.