“செம்பருத்தி” சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!

sembaruthi
sembaruthi

அண்மை காலமாக வெள்ளித்திரைக்கு நிகராக  சின்னத்திரை பல்வேறு ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்கள் சிறப்பாக நடத்தி ரசிகர்களை கவர்ந்து இழுகிறது. இதனால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைக்கு இடையே மறைமுகமாக போட்டி நடக்கிறது சின்னத்திரையில் பல்வேறு தொலைக்காட்சிகளில் சிறப்பான செயல்கள் வெளிவருகின்றன.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி சீரியல் பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியல் பார்க்கவே பல ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த சீரியலில் முக்கிய ரோலில் ஷாபானா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்து வைத்துள்ளார்.

தொடர்ந்து சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் சிறப்பாக பயணித்த ஷபானா திடீரென  பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த  ஆரியனை ஒரு வழியாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகும் நடிகை ஷபானா தொடர்ந்து சீரியல்களில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்.

இது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை    கொடுத்திருந்தது இந்த நிலையில் திடீரென என்ன நினைத்தாரோ என்னவோ செம்பருத்தி சீரியலில் இருந்து அவர் விலக உள்ளதாக கூறப்படுகிறது ஏற்கனவே செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த கார்த்தி வெளியேறிய பிறகு இந்த சீரியல் சற்று சரிவை சந்தித்த நிலையில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷபானா  வெளியேற இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

shabana
shabana

அப்படி என்றால் செம்பருத்தி சீரியல் அதல பாதாளத்தை சந்திக்கும் என கூறப்படுகிறது இவர் வெளியேற இருக்க புதிய சீரியலில் ஷபானாவின்  கணவர் ஆரியன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சன் டிவி தொலைக்காட்சியில் ஒரு புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.