இயக்குனர் பா. ரஞ்சித் தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து தன்னை பெரிய அளவில் பிரபலப்படுத்தி கொண்டு உள்ளார். இவர் முதலில் “அட்டகத்தி” என்னும் படத்தை இயக்கி வெற்றி கண்டார் அதன் பிறகு கார்த்தியை வைத்து மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து காலா, கபாலி என்னும் அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து அசத்தினார்.
இத்தனை வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் பெயர் சேர்த்தது என்னவோ ஆர்யாவை வைத்து எடுத்த “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் தான். இந்த படம் OTT தளத்தில் வெளியாகி ஆரம்பத்தில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று அசத்தியது. இந்த படம் வெற்றி பெற முக்கிய காரணம்..
70,80 காலகட்டங்களில் நடந்த ஒரு உண்மையான குத்து சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது தான் என கூறப்படுகிறது மேலும் இந்த படத்தில் கதைக்கு ஏற்றார் போல பசுபதி, ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், கலையரசன், சஞ்சனா, ஜி எம் சுந்தர் அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து கைதட்டல் பெற்றனர்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டுமென ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர் ஆனால் உடனடியாக பா ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது இப்படி இருக்கின்ற நிலையில் திடீரென சார்பட்டா பரம்பரை இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் பணியாற்றிய பலரும் இரண்டாவது பாகத்தில் பணியாற்றுவார்கள் என குறிப்பிட்டு இருந்தார் ஆனால் இதில் சந்தோஷ நாராயணன் பெயர் மட்டும் இல்லை.. அவருக்கு பதிலாக வேறு யாரோ தான் சார்பட்டா பரம்பரை 2 படத்திற்கு இசையமைக்க போகிறார். எது எப்படி இருந்தாலும் சந்தோஷ் நாராயணன் இல்லாதது சார்பட்டா பரம்பரை படத்திற்கு ஒரு மைனஸ் என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.