நடிகர் சூர்யா 15 வருடங்கள் கழித்து இயக்குனர் பாலாவுடன் கைகோர்த்து புதிய படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க மீனவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எடுத்துரைக்கும் திரைப்படமாக உருவாகி வருகிறது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை என பல வதந்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
ஆனால் அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் வகையில் பாலாவும் அதெல்லாம் ஒன்றும் கிடையாது நாங்கள் வழக்கம்போல எங்கள் பணிகளை தொடர்ந்து வருகிறோம் என கூறினார் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் 2-வது கட்ட படப்பிடிப்பிற்காக இப்படக்குழு நகர்ந்துள்ளது.
இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது வயதான சூர்யாவும் இளமையான சூர்யாவாகவும் நடிக்கிறாராம். வயதான சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியானது இளமையான சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு பிரபலம் விலகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது நடிகை ஜோதிகா வயதான சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என இருந்தார் ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் மேலும் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை எனவும் கூறப்படுகிறது. இது தற்போது ஜோதிகா ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை கொடுத்துள்ளாதாம்.