தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக்கியுள்ளார் மற்றும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்துள்ளார். வாரிசு படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் காமெடி ஆக்சன் போன்ற அனைத்தும் நிறைந்த ஒரு படமாக உருவாகியுள்ளதாம்.
இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார் அவரை தொடர்ந்து பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ போன்ற முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வெளிவர இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் படம் குறித்த அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
அந்த வகையில் முதலில் விஜயின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி இணையதளத்தை கலக்கின அதைத் தொடர்ந்து வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகின இதைத் தொடர்ந்து மற்றும் ஒரு பாடலும் வெளியாகியது இந்த நிலையில் அண்மையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது
அதில் வாரிசு படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர் இயக்குனர் இசையமைப்பாளர் போன்ற பலரும் கலந்து கொண்டனர். இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் வாரிசு படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ள சதீஷ் மற்றும் வி வி டி கணேசன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய சதீஷ் திடீரென கீழே இறங்கி வந்து விஜயை கட்டி அணைத்து அவருடைய ரசிகர்கள் சார்பாக அன்பு முத்தம் கொடுத்துள்ளார் இந்த வீடியோவை தற்போது சதீஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதோ நீங்களே பாருங்கள்..