நடிக்கிறத முதல்ல நிறுத்து நடிகர் ராமராஜனுக்கு கட்டளையிட்ட முக்கிய பிரபலம்.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா.?

ramarajan
ramarajan

80 காலகட்டங்களில் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர்  ராமராஜன் முதலில் இவர் 1977 ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் ஆனால் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது என்னவோ நம்ம ஊரு நல்ல ஊரு தான். அதன் பிறகு இவர் தொட்ட எல்லாமே வெற்றியாக மாறியது..

குறிப்பாக எங்க ஊரு பாட்டுக்காரன், கிராமத்து மின்னல், ராசாவே உன்னை நம்பி, செண்பகமே செண்பகமே, எங்க ஊரு காவல்காரன், நம்ம ஊரு நாயகன், என்ன பெத்த ராசா என்ன என அடுத்தடுத்த ஹிட் படங்கள் நடித்து வந்தார் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த இவர்  2012 ஆம் ஆண்டு மேதாவி படம் தான்..

இவருக்கு கடைசி படமாக அமைந்தது. அதன் பிறகு பல வருடங்கள் கழித்து தற்போது தான் படங்களில் நடிக்க ஆரம்பித்து உள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதில் அவர் சொன்னது.. ராமராஜன் ஒரு முறை தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.  காரை ஓடிய டிரைவர் அந்த சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் ராமராஜன் சுயநினைவை இழந்தார். இதனை எடுத்து அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது இதை அறிந்த ஜெயலலிதா அப்பொழுது அமைச்சர்களாக இருந்த செங்கோட்டையை மற்றும் ஓபிஎஸ் என பலருடன் சென்று ராமராஜனை கவனித்துள்ளார்.

இனி நீ நடிக்க வேண்டாம் எனவும், உனக்கு என்ன தேவையோ அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என ஜெயலலிதா கூறினாராம். இதனை எடுத்து அவர் பல வருடங்கள் சினிமாவில் நடிக்கவில்லை நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தான் அவர் சாமானியம் என்னும் படத்தில் அடுத்து வருகிறார்.