தமிழ் சினிமா உலகில் அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர்களில் ஒருவர் விஜய் இவர் தற்பொழுது தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தளபதி விஜய்க்கு 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தை மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ஜெயசுதா, குஷ்பூ, ராதிகா, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ், சரத்குமார் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
படப்பிடிப்பை விறுவிறுப்பாக முடித்துவிட்டு அடுத்ததாக படக்குழு போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளை நோக்கி நகரும் என தெரிய வருகிறது. படம் அடுத்த வருடம் 2023 பொங்கலன்று ரிலீஸ் ஆகும் என திட்ட வட்டமாக சொல்லி உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்து வரும் நடிகர் சரத்குமார் வாரிசு படம்.
குறித்தும் விஜய் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார். வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சென்டிமென்ட் படம் கிடையாது அதையும் தாண்டி ஆக்சன் காமெடி என அனைத்தும் அற்புதமாக வந்துள்ளதாக கூறினார். மேலும் இந்த படம் விஜய்க்கு மிகப்பெரிய ஒரு படமாக அமையும் என சொல்லினர்.
இந்த நிலையில் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர் விஜய்க்கு நிகராக இந்த படத்தில் ஒரு சிலரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என தெரிய வருகிறது. அந்த வகையில் சரத்குமாருக்கு இந்த படத்தில் பெரிய அளவிலான மாஸ் காட்சிகள் நிறைய இருக்கும் அதனால் விஜய்க்கு நிகராக நடிகர் சரத்குமார் நடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது.