சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தனது 169 ஆவது திரைப்படம் ஆன ஜெயிலர் எனும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை பீஸ்ட், கோலமாவு கோகிலா போன்ற ஹிட் படங்களை கொடுத்த இளம் இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார்.
இந்த படத்தை சன் பிக்ச்சர் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்க உள்ளார். இப்படி ஜெயிலர் படம் உருவாக தேவையான அனைவரையும் தேர்வு செய்த நிலையில் ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்பட்டதா என்ற தகவல் வெளிவரவில்லை இந்த மாதத்தில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டது.
ஆனால் படப்பிடிப்பு தொடங்கியதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளார். பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் போன்ற சிலரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இருந்தாலும் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளி வராத..
நிலையில் அண்மையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியுடன் இந்த படத்தில் வடிவேலு இணைகிறார் என கூறப்பட்டது. ஆனால் அதுவும் உண்மை இல்லையாம் தற்போது வந்த தகவலின் படி காமெடி நடிகர் யோகி பாபு தான் ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் முனிஸ்கான் நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் யோகி பாபு தான் நடிக்க..
இருந்தாராம் அதுவும் ரஜினி சிபாரிசு செய்ததன் பெயரில் முதலில் யோகி பாபு உடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது அப்போது யோகி பாபு கால்ஷீட் கிடைக்காததால் பின்பு முனீஸ்கான் பேட்டை திரைப்படத்தில் நடித்தார். அதைப்போல் ஜெயிலர் படத்திற்கும் யோகி பாபுவை ஓகே பண்ண ரஜினி தான் சிபாரிசு செய்திருப்பார் என கூறப்படுகிறது