மும்பையில் வாழ்ந்துவரும் சுருதிஹாசனின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.? இதோ அந்த புகைப்படம்.

shruthi haasan

தமிழ் சினிமா உலகில் வாரிசு நடிகர் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசனின் இரு மகள்களும் சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து அசத்தி வருகின்றனர்.

குறிப்பாக மூத்த மகள் சுருதிஹாசன் எடுத்தவுடனேயே டாப் நடிகர்களுடன் நடித்து வருவதால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது சுருதிஹாசன் முதலில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார் அதன்பின் அஜித்துடன் வேதாளம், விஜய்யுடன் புலி, தனுஷுடன் 3 என டாப் நடிகர் படங்களில் நடித்து.

தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தினார். ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி ஹிந்தி தெலுங்கு போன்ற மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. படங்களில் எவ்வளவு திறமையை காட்டுகிறாரோ அதே அளவு தாராளமாக கிளாமர் காட்சிகளிலும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு நடிப்பது நடிகை சுருதி ஹாசனுக்கு அல்வா சாப்பிடுவது போல்..

இதனால் இவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். தொடர்ந்து சுருதிஹாசன் டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது பாகுபலி பட ஹீரோ பிரபாஸ்  உடன் கைகோர்த்து சலார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதை தவிர தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து வருகிறார்.

shruthi haasan house
shruthi haasan house

இது ஒரு பக்கம் இருந்தாலும் சினிமா நேரம் இல்லாத சமயத்தில் கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் வசித்து வருகிறார் அந்த வீட்டின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

shruthi haasan house
shruthi haasan house