சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரச்சித்தா இவர் முதலில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” சீரியல் நடித்து இல்லத்தரசிகள் மனதில் முதலில் இடம் பிடித்தார் பின் போகப்போக தனது திறமையும், அழகையும் காட்டி சூப்பராக ஓடியதால் இவருக்கென ரசிகர்களும் உருவாகினார்..
பிரிவோம் சந்திப்போம் சீரியலைத் தொடர்ந்து இளவரசி, சரவணன் மீனாட்சி சீசன், 2 சரவணன் மீனாட்சி சீசன் 3, நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர், செம்பருத்தி என தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர் அவ்வபொழுது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் அந்த வகையில் ஜூனியர் சீனியர், பிக்பாஸ் சீசன் 6, பிக்பாஸ் கொண்டாட்டம் போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன்னை பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொண்டார்.
இப்படி சின்ன திரையில் ஓடிய இவர் சோசியல் மீடியாவில் படும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ரசிகர்களுடன் உரையாடுவது, புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வந்தார் இதனால் இவருக்கான ரசிகர்கள் பட்டாலும் நாளுக்கு நாள் அதிகரித்தனர்.. வெகு விரைவிலேயே இவர் வெள்ளி திரை வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வந்தனர்.
ஆனால் இதுவரை வெள்ளித்திரை வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஆனால் அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளார் ஆம் சோசியல் மீடியாவில் ரச்சித்தா தொடர்ந்து கியூட்டான மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சீரியல் நடிகை ரச்சித்தா விலை உயர்ந்த எம்ஜி லெட்டர் என்கின்ற சொகுசு காரை வாங்கி உள்ளார்.
இதனுடைய மொத்த மதிப்பு சுமார் 22 லட்சம் என கூறப்படுகிறது புதிய காருடன் நடிகை ரச்சித்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சில பதிவுகளையும் போட்டுள்ளார் அதில் அவர் சொன்னது புதிய ஆண்டு புதிய தொடக்கம் என பதிவிட்டு இருக்கிறார் அந்த போட்டோ தற்பொழுது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இதோ நீங்களே பாருங்கள்.