சூர்யாவுக்கு வரும் லவ் லெட்டரில் இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாமே இருக்கும் – பல வருட ரகசியத்தை சொன்ன சூர்யாவின் தங்கை.!

surya
surya

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதில் தனது திறமையை வெளிக்காட்டி வெற்றி மேல் வெற்றியை அள்ளி வருபவர் நடிகர் சூர்யா இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் மற்றும் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்திலும் நடித்து மிரட்டி இருந்தார். அந்த படமும் தற்போது வெற்றியை ருசித்து சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுவரை ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூர்யா கமலின் விக்ரம் திரைப்படத்திற்காக கடைசி இரண்டு நிமிட காட்சிக்காக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அவருடைய ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் தற்போது தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள் விக்ரம் 3 ல் சூரியாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் இன்னும்..

அதிகமாக இருக்கும் என்பதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஓங்கியிருக்கிறது. வில்லன் கதாபாத்திரம் சூர்யாவுக்கு செம்மையாக பொருந்தியுள்ளது  எனவும் கூறி வருகின்றனர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இப்பொழுது பாலாவுடன் கைகோர்த்து மீனவர் சம்பந்தப்பட்ட ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அதன்பிறகு தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் படத்திலும் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருவதால் சூர்யாவின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யாவின் தங்கை தனியார் பேட்டி ஒன்றில் சில சுவாரசிய தகவல்களை கொடுத்துள்ளார் அதில் அவர் சொன்னது. அண்ணன் சூர்யா நேருக்கு நேர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நான் முதலாமாண்டு படித்தேன் அப்பொழுது அண்ணனுடைய தீவிர ரசிகைகள் பலரும் லவ் லெட்டர் எழுதி அனுப்பியிருந்தனர்.

அதிகமா மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தான் ரசிகைகளின் லெட்டர் வந்தது. லெட்டரில் எனக்கும் உனக்கு நல்ல அண்ணியாக இருப்பேன் நன்றாக பார்த்துக் கொள்வேன் என கூறியிருப்பார்கள். அண்ணன் கிட்ட எடுத்து சொல்லு என கூறி மாடர்ன் டிரஸ் மற்றும்  சேலையில் இருக்கும் புகைப்படங்களை அனுப்பி வைப்பார்கள் என கூறினார்.