சினிமா ஆரம்பத்தில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த விஷால் சமீபகாலமாக ஹிட் படங்களை கொடுக்க முடியாமல் தள்ளாடி வருகிறார் அண்மையில் கூட விஷால் ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றுத் தரவில்லை.
இருப்பினும் சினிமா உலகில் தொடர்ந்து சிறப்பான கதைகளை கேட்டு நடித்து வருகிறார். விஷால் ஏதேனும் ஒரு படம் ஹிட் கொடுக்கும் பட்சத்தில் அதை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த விஷால் முனைப்பு காட்டி வருகிறார் இவர் கையில் இப்போது துப்பறிவாளன் இரண்டாம் பாகம், லத்தி ஆகிய படங்களில் இருக்கின்றன.
இந்த படங்களில் தான் தற்போது தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார் விஷால். அதிலும் குறிப்பாக லத்தி படத்தின் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஷாலுடன் கைகோர்த்து சுனைனா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்கி வருகிறார். லத்தி திரைப்படத்தை ரமணா மற்றும் நந்தா ஆகிய இருவரும் தயாரித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படு வேகமாக போய்க்கொண்டிருக்கிறது இந்தப் படத்திற்கு ஸ்டண்ட் பயிற்சியாளராக பீட்டர் ஹெய்ன் நியமிக்கப்பட்டார். இவரது திருமண நாளை அறிந்துகொண்ட படக்குழு உடனடியாக அவரது மனைவியை ஐதராபாத்துக்கு அழைத்து வந்து படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பீட்டர் ஹெய்ன் தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் பல்வேறு படங்களுக்கு ஸ்டண்ட் பயிற்சியாளராக பணியாற்ற தேசிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.