தமிழ் திரை உலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக உலகநாயகன் கமலஹாசன் நடித்து அசத்தியிருப்பார். இவ்வாறு உருவான இந்த திரைப்படம் கடந்த 3ஆம் தேதி தான் திரையரங்கில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்தது மட்டுமில்லாமல் கடைசியாக சூர்யா கொடுத்த என்ட்ரீ ரசிகர்களை அதிர்ச்சியை உண்டாக்கி விட்டது என்றே சொல்லலாம்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள் அதில் நடித்த நடிகைகள் யார் யார் என்றால் சின்னத்திரை நடிகைகள் ஆன ஷிவானி நாராயணன், மகேஸ்வரி, மைனா நந்தினி ஆகிய மூவரும் அவர்கள்.
இவ்வாறு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படமானது திரையரங்கில் பார்க்கும் போது ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களின் ஏக்கத்தை உண்டாக்கிய அதுமட்டுமில்லாமல் அசர வைத்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு லோகேஷ் தன்னுடைய கைவரிசையை இந்த திரைப்படத்தில் காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது மட்டும் இல்லாமல் வெறும் மூன்று நாட்களில் மட்டுமே 165 கோடி வசூல் செய்தது பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. மேலும் இந்த திரைப்படமானது இன்னும் பல கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படமானது அமெரிக்காவில் ரஜினியின் கபாலி திரைப்படம் சாதனையை கமலின் விக்ரம் திரைப்படம் முடிவெடுத்து விட்டது என்று கூறப்படுகிறது அந்த வகையில் ஆண்டவரின் விக்ரம் திரைப்படம் 11.25 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.