நடிகர் சூர்யா சினிமாவில் அவரது இளம் வயதிலேயே ஹீரோவாக நடிக்க தொடங்கி விட்டார் அதற்கு முக்கிய காரணம் சூர்யாவின் அப்பா சிவகுமார் பிரபல நடிகர் என்பதால் சூர்யாவிற்கு மிக எளிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆரம்பத்தில் காதல் கலந்த படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் குடி பெயர்ந்தவர் சூர்யா.
ஒரு கட்டத்தில் உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன் போன்ற படங்களில் அவருடன் இணைந்து ஹீரோயினாக நடித்த ஜோதிகாவை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டு இன்று வரை திருமண வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகின்ற நிலையில் இருவரும் தனது கேரியரிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஒருபக்கம் நடிகை ஜோதிகாவும் சிறந்த கதைகளம் வரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் மறுபக்கம் சூர்யாவும் சூப்பரான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் பாலா உடன் இணைந்து வணங்கான் எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார்.
இந்த படத்தின் கதை மீனவர்கள் சம்பந்தப்பட்ட கதையாக எடுத்து வருகின்றன. மேலும் வாடிவாசல் மற்றும் சில பெயர் வைக்கப்படாத படங்களிலும் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூர்யா நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ஹிட் ஆகினாலும் சில படங்கள் தோல்வியையும் தழுவின.
அப்படி சூர்யாவின் தோல்வியை தழுவிய திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். 1. சூர்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த என் ஜி கே திரைப்படம், 2. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா சமந்தா நடிப்பில் வெளிவந்த அஞ்சான் திரைப்படம் 3. ரத்த சரித்திரம், 4. மாயாவி, 5. ஸ்ரீ, 6. பெரியண்ணா, 7. சந்திப்போமா, காதலே நிம்மதி ஆகிய படங்கள் தோல்வியை தழுவிய படங்களாக கூறப்படுகிறது.