LEO : தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியிட இருக்கிறது படக்குழு இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பல வருடங்களுக்கு பிறகு திரிஷா நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் சஞ்சய் தத் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் ஆடியோ லான்ச் வருகின்ற 30 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் விஜய் ரசிகர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் லியோ திரைப்படத்திலிருந்து ஒவ்வொரு நாளும் புதிய புதிய போஸ்டரை வெளியிட்டு வருகிறது படக்குழு இது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.
லியோ படத்தின் ஒரு பாடலில் 2000 நடன கலைஞர்கள் ஆடியதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது குறித்து தற்பொழுது சினிமா விமர்சகர் பிஸ்மி மற்றும் அந்தணன் கூறியதாவது லியோ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு 2000 பேர் ஆடியதாக கூறியது அனைத்தும் பொய் நடன கலைஞர்கள் 200 பேர் மட்டுமே ஆடினார்கள் ஆள் கிடைக்காமல் டான்ஸ் கிளாஸ் போனவர்கள் சினிமாவில் நடிக்க ஆசைப்படுபவர்கள் என ஆயிரம் பேரை பின்னாடி ஆட வைத்தார்களாம்.
இதில் என்ன ஒரு விஷயம் என்றால் அந்த 200 நடன கலைஞர்களுக்கு மட்டும் சம்பளம் கொடுத்து விட்டார்கள் பின்னாடி ஆடிய 1000 பேருக்கு சம்பளம் கொடுக்காமல் இழுக்கடித்து வருகிறார்களாம்.
மேலும் அந்த பாடலுக்கு ஆறு நாள் ஷூட்டிங் நடைபெற்றதாகவும் ஒரு ஆளுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வரும் எனவும் சினிமா விமர்சகர் தற்பொழுது கூறியுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆயிரம் பேர் கண்ணீரில்தான் நான் ரெடி பாடல் உருவானதா என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.