அதிக திரையரங்குகளில் வெளியாகும் “தி லெஜண்ட்” – மொத்தம் எத்தனை தெரியுமா.? ரஜினி, விஜய்க்கே டஃப் கொடுப்பார் போல..

the-legand-
the-legand-

திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சினிமா உலகில் கால் தடம் பதிக்க முடியும் அந்த வகையில் சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன் அருள். தனது கடைகளின் விளம்பரத்திற்காக முதலில் நடித்து வந்தார் தற்பொழுது ஹீரோவாக நடிகர் தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் சரவணன் அருள் நடித்துள்ள முதல் திரைப்படம் தி லெஜெண்ட் இந்த படம் வருகின்ற 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை ஜெடி – ஜெர்ரி என இருவர் சேர்ந்து இயக்கி உள்ளனர். இந்த படத்தை 200 கோடி பொருள் செலவில் சரவணன் அருள் தயாரித்துள்ளார்.

படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரை பலமாக உருவாகி இருக்கிறது. தி லெஜன்ட் படத்தில் சரவணன் அருளுடன் இணைந்து பிரபு, யோகி பாபு, நாசர், லிவிங்ஸ்டன், மயில்சாமி விவேக், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் பலர் நடித்துள்ளனர் இந்த படம் ஐந்து மொழிகளில் திரையரங்கில் வெளியாகிறது ஆம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகும்.

முதல் படத்தையே தி லெஜென்ட் சரவணன் அவர்கள் மிகப்பெரிய அளவில் படத்தை ரீச் செய்து பெரிய அளவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. தி லெஜன்ட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது தான் அதிசயமே டாப் நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் மட்டுமே சுமார் 2500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகுவது வழக்கம்.

அந்த சாதனையை முதல் படத்திலேயே செய்துள்ளார் சரவணன்  அருள். The legend திரைப்படம் சுமார் 2500 திரையரங்குகளில் வெளியாகிறது. இது தற்பொழுது சினிமா பிரபலங்களையே வியப்பிற்குள்ளாக்கி உள்ளது மேலும் தி லெஜெண்ட் படம் முதல் இரண்டு நாட்களில் மட்டுமே மிகப் பெரிய ஒரு வசூல் வேட்டையை நடத்த அதிக வாய்ப்புகள் இருக்கிறது ஏனென்றால் அந்த அளவிற்கு திரையரங்கில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.