சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தனக்கு நடிப்பு திறமை இருப்பதால் எப்படியாவது சினிமாவில் வளர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமாவிற்கு அறிமுகமான ஏராளமான நடிகர்கள் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அதிகமாக பணம் இருப்பதால் அதனை எப்படி செலவு செய்வது என்பது தெரியாமல் தன்னுடைய பணத்தை போட்டு சினிமாவில் நடித்து வருபவர்கள் சிலர் உள்ளார்கள் .
அந்த வகையில் ஒருவர் தான் தொழிலதிபர் சரவணன் அருள். இவர் தன்னுடைய கடை விளம்பரத்தில் நடித்து வந்தார் பிறகு இவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார் இந்த திரைப்படத்தினை ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜனண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகை ஊர்வசி ரௌத்தலா நடித்திருந்தார்.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக இவர் பல கோடி சம்பளமாக பெற்றார் என்பதை குறிப்பிடத்தக்கது. லெஜண்ட் திரைப்படத்திற்காக ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்த்து வந்த நிலையில் இப்படத்தில் சரவணன் அருளின் முகத்தில் எந்த ஒரு எக்ஸ்பிரஷனும் இல்லை என அனைவராலும் கலாய்க்கப்பட்டார். இவ்வாறு பலர் விமர்சித்து வந்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தனது வேலையை பார்த்து வருகிறார் லெஜணாட்.
இவ்வாறு தனது முதல் திரைப்படம் தான் இப்படி ஆகிவிட்டது என்று அடுத்த திரைப்படத்தில் நடிக்காமல் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது நெவர் என்ற அடுத்த பட வேலையை துவங்கி உள்ளார் எனவே தன்னுடைய அடுத்த படத்தை இயக்குவதற்காக இயக்குனர்களை சந்தித்து வருகிறார்.லெஜண்ட் விரைவில் அடுத்த திரைப்படத்தின் பற்றிய தகவல் வெளியாக இருக்கிறது.
தனது முதல் திரைப்படம் தோல்வி அடைந்துள்ள நிலையில் அதனைப்படுத்திக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் தன்னுடைய அடுத்த கட்ட பணியில் கிளம்பிவிட்டார் இதன் காரணமாக ரசிகர்கள் சிங்கம் கிளம்பிவிட்தோ என கூறுகிறார்கள். இவருடைய இரண்டாவது திரைப்படத்தை சர்வதேச அளவில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.