வசூலில் பிரபாஸ் படத்தையே முந்திய “தி லெஜண்ட் படம்”..! எங்கு தெரியுமா.?

the-legend
the-legend

தி லெஜண்ட் ஸ்டோர் ஓனர் சரவணன் அருள் தனது கடை விளம்பரங்களுக்கு தான் முதலில் நடித்து வந்தார் ஆனால் சினிமா ஆர்வம்  சின்ன வயதில் இருந்ததால் அவர் படத்தில் நடிக்க கதைகளை கேட்டு வந்தார். அந்த சமயத்தில் இயக்குனர் ஜெடி – ஷெரி சொன்ன தி லெஜண்ட் கதை ரொம்ப பிடித்துப் போவது அந்த படத்தில் துணிந்து நடித்தார்.

மேலும் தயாரிப்பாளராகவும் இந்த படத்தின் மூலம் விஸ்வரூபம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் மற்றும் காமெடி கலந்த திரைப்படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பற்றிய தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்தார்.

மேலும் இந்த படத்தில் விவேக், யோகி பாபு, மயில்சாமி, பிரபு மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தி லெஜண்ட் திரைப்படம் தமிழ் நாட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும் வெளியாகி இப்பொழுது தொடர்ந்து படம் ஃபுல்லாக பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளிலும் தமிழகத்தில் மட்டும் 800 திரையரங்குகளிலும் வெளியாகியது தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் நல்ல வசூலை அள்ளி வருவதால் படக்குழு சந்தோஷமாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் முக்கிய இடத்தில் பிரபாஸ் படத்தின் வசூலை முறியடித்து முந்தி உள்ளது.

கேரளாவில் முதல் நாளில் பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படம் வெறும் 4 லட்சம் மட்டுமே வசூலித்தது ஆனால் தி லெஜண்ட் திரைப்படம் அங்கே முதல் நாளில் சுமார் 4.7 லட்சம் வசூலித்து நடிகர் பிரபாஸ் படத்தை பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளது. இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு பெரிய அளவில் வைரலாகி வருகிறது.