The legend saravana store owner arul saranana கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்கள்அன்றாடத் தேவைக்கு கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நடிகர் நடிகைகள் பெப்சி யூனியன் தொழிலாளிகளுக்கு உதவி வருகிறார்கள்.
இந்நிலையில் லாரன்ஸ், அஜித், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, நயன்தாரா, ரஜினி, கமல் என அனைவரும் பெப்சி யூனியனுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். திரைத்துறையில் கோடிகளில் சம்பளம் வாங்கும் சில நடிகர்-நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் எந்த ஒரு நன்கொடையும் கொடுக்கவில்லை.சினிமா துரையிலிருந்து சம்பாதித்த பணத்தை பெப்சி யூனியனுக்கு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் சரவணன் இப்போது தான் சினிமா துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். இன்னும் முழுசாக ஒரு படம் கூட நடித்து முடிக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது இவர் பெப்சி யூனியனுக்கு 25 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். இதனை அறிந்த யூனியன் மக்கள் சரவணா ஸ்டார் உரிமையாளர் அருள் சரவணனை பெரிதும் பாராட்டுகின்றனர்.