தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு இணையாக அடித்த தும்சம் செய்யும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி.! அனல் பறக்க வெளியான வீடியோ.!

the legent
the legent

கடந்த பல வருடங்களாக தொழிலதிபராக வலம் வந்தவர் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி. இவர் தன்னுடைய கடை தொடர்பான விளம்பரங்களில் மட்டுமே முதன் முதலில் நடித்து வந்தார். அதிலும் தீபாவளி பொங்கல் பண்டிகை வந்து விட்டாலே போதும் புதிய விளம்பரங்களை எடுக்க ஆரம்பித்து விடுவார்கள் அந்த விளம்பரங்களில் தானே நடிகைகளுடன் நடித்து வந்தார்.

சினிமா நடிகைகளுடன் சினிமா நடிகர்களை வைத்து விளம்பரம் எடுக்காமல் அந்த விளம்பரங்களில் தானே ஹீரோ போல் நடிப்பார் அப்படிதான் சரவணா ஸ்டோர் அண்ணாச்சியை பலருக்கும் தெரியவந்தது. இந்த நிலையில் முதன் முதலாக ஒரு  முழு திரைப்படத்தில் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடித்துள்ளார் இந்த திரைப்படத்திற்கு தி லெஜன்ட் என பெயர் வைத்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள சரவணன் படத்தின் ரிலீஸ்க்குகாக காத்துக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் வருகின்ற 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கிறது.

பல வருடங்களாக பிரபல தொழிலதிபராக வலம் வரும் சரவணன் இதுவரை சமூக வலைத்தளத்தில் கணக்கை தொடங்காமல் இருந்து வந்தார்   முதன் முறையாக தன்னுடைய படத்திற்காக பிரமோஷன் தேவை என அறிந்து முதன் முறையாக ட்விட்டர் பக்கத்தில் கணக்கை தொடங்கியுள்ளார் அந்த டுவிட்டர் பக்கத்தில் தி லெஜன்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி சண்டை காட்சிகளின் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது அது மட்டும் இல்லாமல் சினிமாவில் மாஸ் நடிகர்களின் ரசிகர்கள் இந்த ஸ்டாண்ட் காட்சிகளை பார்த்து ரசித்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசை அமைத்துள்ளது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

மேலும் தி லெஜன்ட் திரைப்படத்தில் சரவணன் அவர்களுடன் இணைந்து  ஊர்வசி ரவுட்டலா விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டன் யோகி பாபு, ரோபோ சங்கர் என பலரும் நடித்துள்ளார்கள். படத்தை ஜேடி ஜெர்ரி என்பவர் இயக்கி உள்ளார். இந்த அதிரடி சண்டை காட்சிகள் தற்போது இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.