அண்மை காலமாக சினிமா உலகில் புதுமுக நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. அந்த வகையில் சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன் அருள் சினிமா உலகில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். ஜெடி – ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் அருள் நடித்த படம் தி லெஜண்ட்.
சரவணன் அருளுடன் கைகோர்த்து ஊர்வசி ரவுத்தேலா, விவேக், சுமன், நாசர், பிரபு, யோகி பாபு, யாஷிகா ஆனந்த், ராய் லட்சுமி, கிருஷ்ணா, ரோபோ சங்கர், கோவை சரளா, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் ஆக்சன் காமெடி என அனைத்தும் கலந்த கதையாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி சிறியவர்கள் முதியவர்கள் என அனைவரது மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
உலக அளவில் 2500க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தில் மட்டுமே சுமார் 600 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு இணையாக முதல் படமே அதிக திரையரங்குகளில் சரவணன் அருள் வெளியிட்டது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதிகாலை 4 மணிக்கு எல்லாம் இந்த படம் வெளியாகிறதும் குறிப்பிடத்தக்கது. முதல் படத்தையே டாப் நடிகர்களுக்கு இணையாக அவர் ரிலீஸ் செய்திருந்தார். படம் வெளிவந்து தொடர்ந்து நல்ல விமர்சனத்தையும் வசூலையும் கண்டு ஓடியது இதனால் முதல் நாளே கோடிக்கணக்கில் வசூல் செய்தது வருகின்ற நாட்களிலும் நல்ல வசூல் செய்யும் என படகுழு எண்ணியது.
அதுபோல தொடர்ந்து நல்ல வசூலை அள்ளி ஓடி இரண்டு வார முடிவில் இதுவரை மட்டுமே சுமார் 12.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது அறிமுக ஹீரோ ஒருவரின் படம் 12.5 கோடி வசூல் செய்தது எல்லாம் பெரிய விஷயம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது சரவணன் அருள் அடுத்தடுத்த படத்தில் நடிக்கும் பட்சத்தில் அவரது மார்க்கெட் சினிமா உலகில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.