ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனத்திடம் வசமாகமாட்டிக் கொண்ட “தி லெஜன்ட்”.! போட்ட காசை எடுப்பாரா நம்ம அண்ணாச்சி.

the-legant-

தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகர்களின் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் திடீரென தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. ஜூலை 28ஆம் தேதி திரையரங்கில் வெளியே வருகிறது. தி லெஜன்ட் படத்தை ஜெடி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ளனர் படம் சிறப்பாக வந்துள்ளது.

இந்த படத்தில் சரவணன் அருளுடன் இணைந்து விவேக், நாசர், பிரபு, யோகி பாபு, ஊர்வசி ரவுத்தேலா மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர் அண்மையில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் மிக பிரம்மாண்ட முறையில் ரிலீசானது இந்த ஆடியோ லான்சுக்காக முன்னணி நடிகைகளுடன் சும்மா கெத்தாக என்ட்ரி கொடுத்தார் சரவணா ஸ்டோர் அருள்.

ஆடியோ லான்ச்சுக்கு மட்டுமே சுமார் பத்து கோடி அவர் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருப்பதை சரவணன் அருள் ஆடியோ லான்ச்லயே பார்த்தார் இதனை தொடர்ந்து படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பாக படத்தை விநியோகஸ்தர்களிடம் விற்கத் தொடங்கினார்.

ஆனால் சரவணன் அருள் கணித்தது போல யாரும் அந்த படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்கவில்லை காரணம் படம் சிறப்பாக இருந்தாலும் உங்களுக்கு வயதாகி விட்டது உங்கள் முகத்தை பார்க்க வருவார்களா என்பது கேள்விக்குறி தான் மேலும் உங்களுக்கு இது முதல் திரைப்படம் எனக்கூறி குறைந்த காசுக்கு கேட்டுள்ளனர் வேறு வழி இன்றி விநியோகஸ்தர்கள் கேட்ட காசுக்கு  கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தி லெஜன்ட் படத்தை எதிர்த்து  சந்தானத்தின் குளு குளு திரைப்படம் வெளிவர இருக்கிறது இதனால் தற்பொழுது சரவணன் அருளுக்கு பிரச்சனை எழுந்துள்ளது அதாவது சந்தானமும் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர். அதனால் குலு குலு திரைப்படம் தான் தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியிட ரெட் ஜெயன்ட்ஸ் மூவி நிறுவனம் வேலை செய்யும் என தெரிய வருகிறது.

இதனால் சரவணன் அவர்கள் நடித்துள்ள தி லெஜெண்ட் படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்காது என கூறப்படுகிறது 200 கோடி பட்ஜெட்டில் படத்தை எடுத்து ஆடியோ லான்ச்சுக்கு 10 கோடி செலவு செய்ததெல்லாம் சரி தான் ஆனால் படம் அந்த அளவிற்கு திரையரங்கில் வெளியானால் தான் கல்லா கட்ட முடியும்.

இதற்கு சரவணன் அருள் ரெட் ஜெயன்ட் மூவியை சந்தித்து பேசி இருந்தால் தி லெஜன்ட் படம் அதிக திரையரங்குகளில் வெளியாகும் ஆனால் தற்பொழுது அதை விட்டு விட்டதால் திரையரங்கு எதிர்பார்த்த அளவுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடிகரும் தயாரிப்பாளருமான சரவணன் அருள் சற்று வருத்தத்தில் இருக்கிறாராம்.